2025 பெப்ரவரி 05, புதன்கிழமை

முக்கொலை தொடர்பில் முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு அதிகாரி கைது

Freelancer   / 2025 பெப்ரவரி 04 , பி.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி - ஹினிதும, மகாபோதிவத்த பகுதியில் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு அதிகாரியை பொலிஸார் இன்று (04) கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி ஹினிதும மஹாபோதிவத்த பகுதியில் கடந்த 30 ஆம் திகதி இரவு 11.15 மணியளவில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரில் ஒருவர் T56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் ஐந்து பேர் விடுதியில் மது அருந்திக் கொண்டிருந்தனர், அவர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் மற்ற இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் விடுதியின் உரிமையாளரான இந்துனில் சமன் குமார (வயது 55) மற்றும் அம்பலாங்கொடையைச் சேர்ந்த எம். நெவில் மற்றும் ஹினிதும பகுதியைச் சேர்ந்த 34 வயதான சத்துரங்க குமார என்ற மூன்று நபர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

கொலை செய்யப்பட்ட மூன்று நபர்களுக்கும் பாதாள உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X