2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

பொலிஸ் உத்தியோகத்தர் மீது கூறிய ஆயுதத்தால் தாக்குதல்

Janu   / 2025 பெப்ரவரி 13 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு 02, ஹுனுப்பிட்டிய குறுக்கு வீதியில் , வியாழக்கிழமை (13) அதிகாலை 2.45 மணியளவில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்ற ஒருவரை சோதனை செய்ய முயன்ற கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவரை, சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கொம்பனி வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த கான்ஸ்டபிள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கான்ஸ்டபிள் தனது கடமையை முடித்து விட்டு வீடு திரும்பும் போது, ​​சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்ற ஒருவரைப் பார்த்து சந்தேகப்பட்டு அவரைப் பின் தொடர்ந்த நிலையில்  . ஹுனுப்பிட்டிய குறுக்கு வீதியில் வைத்து சந்தேக நபரை பிடித்து, தான் ஒரு பொலிஸ் அதிகாரி என கூறி, அவரை விசாரிக்க முயன்றபோது, ​​கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளுக்கமைய    சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X