2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பெயர் சூட்டும் முன்னரே குழந்தை மரணம்

Editorial   / 2023 ஒக்டோபர் 19 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் 21 ஆம் வார்டில் பிறந்த குழந்தையை ஐந்து நாட்களுக்கு முன்னர் பிறந்த குழந்தை திடீரென இறந்துள்ளது.

பேருவளை சைனா ஃபோர்ட் குச்சி மலே பகுதியைச் சேர்ந்த தாயார், குழந்தையை வீட்டுக்குக் கொண்டு வந்த நிலையில், திடீரென சுகயீனமடைந்துள்ளது. இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், புதன்கிழமை  (18) இரவு   குழந்தை உயிரிழந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அரசு வைத்தியசாலைக்கு  கொண்டு வந்தபோது குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக பேருவளை வைத்தியசாலையின் வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.

இறந்து 5 நாட்களே ஆன குழந்தையின் தாய்க்கு திருமணமாகி ஆறு வருடங்கள் கழித்து பிறந்த முதல் குழந்தை இதுவாகும். அக்குழந்தைக்கு  இதுவரை பெயர் சூட்டப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .