Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 02, வியாழக்கிழமை
Editorial / 2024 செப்டெம்பர் 01 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது தலைமுடியை அலங்காரம் செய்துகொண்ட பெண்ணொருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, நஞ்சாகி, அப்பெண்ணின் தலைமுடி கடுமையாக உதிர்வடைந்ததை அடுத்து அப்பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம், மினுவாங்கொடையில் இடம்பெற்றுள்ளது.
மினுவாங்கொடை நகரிலுள்ள அழகு நிலையமொன்றுக்கு விருந்தொன்றில் கலந்துகொள்வதற்காக தலைமுடியை சீர்செய்வதற்காக சென்ற பெண்ணொருவர் தலைக்கு செலுத்தப்பட்ட பொருட்களால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக கடுமையான முடி உதிர்வு ஏற்பட்டு கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
மினுவாங்கொடை, பொரகொட வத்த பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இந்த திருமணமான பெண், மினுவாங்கொடை பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள சனச வணிக வளாகத்தில் அமைந்துள்ள அழகு நிலையமொன்றிற்கு முடியை அலங்கரிப்பதற்காக சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். .
தலைமுடியை அழகுபடுத்த சில ஹேர் ஸ்டைலிங் பொருட்களை தடவியுள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த பெண் தனது தலையில் வீக்கத்தால் அசௌகரியமாக உணர ஆரம்பித்தார், தனக்கு ஏற்பட்ட ஒவ்வாமையை தெரிவித்துள்ளார். .
பின்னர், இரண்டு பெண்களும் அந்த பெண்ணின் தலையை கழுவி துடைத்துள்ளனர், ஆனால் கடுமையான வீக்கம் காரணமாக, பெண் அவரது தலையை தொட்டபோது, அவரது முடி முற்றிலும் உதிர்ந்து விட்டது. பின்னர் அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago