Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 மே 08 , பி.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக அநுராதபுரத்தில் உள்ள விஹாரைகள் பலவற்றுக்கு நேற்று (08) சென்றிருந்தார். அங்கெல்லாம், பிரதமருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மஹா போதிக்கு அண்மையில் நின்றிருந்த சிலர் பிரதமருக்கு எதிராக குரல்லெழுப்பி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் ருவன் வெலிசேயவிலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
அநுராதபுரத்தில் தொடர்ச்சியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் சிலரே ருவன் வெலிசேயவிலும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இவ்விரு விஹாரைகளிலும் வழிபாடுகளை நிறைவு செய்துக்கொண்டு மிரிசவெட்டியவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சென்றபோது அங்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், பாதுகாப்புப் பிரிவினர் பிரதமரை அவ்விடத்திலிருந்து பாதுகாப்பாக அழைத்து வந்துவிட்டனர்.
“புதுன் அப்பாச்சி கும்பிடுகின்றோம், கடவுளை நாளை (இன்று) இருக்கும் நல்ல நேரத்தில், நல்ல தீர்மானத்தை எடுத்து நாட்டை காப்பாற்றி தாருங்கள். புதுன் அப்பாச்சி உங்களிடம் அவ்வளவுதான் கேட்கின்றோம். நாட்டை காப்பாற்றித் தாருங்கள். உங்களிடமிருந்து நல்ல செய்தியை நாளைக்கு (இன்று) எதிர்ப்பார்க்கின்றோம். நீங்கள் செய்தீர்கள்தான், இப்போதைக்குப் போதும்” என்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்கள் குரல் எழுப்பினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago