Freelancer / 2023 செப்டெம்பர் 07 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேசத்தில் புதிய வீடுகள் அமைப்பவர்களுக்கு தென்னை மரங்கள் வழங்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச சபை கட்டிடத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை(7) இடம்பெற்றது.
ஆரையம்பதி பிரதேச சபை எல்லைக்குள் தேசிய வீடமைப்புத் அபிவிருத்தி அதிகாரசபை திட்டத்தின்கீழ் புதிய வீடுகளை கட்டுபவர்கள் மற்றும் புதிதாக வீடு கட்டுவதற்கென அனுமதி பெற்றவர்களுக்கான தென்னை மரங்கள் நேற்றையதினம்(07) மண்முனைப் பற்று பிரதேச சபை செயலாளர் ஜே. சர்வேஸ்வரன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.
உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் எனும் அரசின் வேலைத்திட்டத்தின்கீழ் இத்தென்னை மரங்கள் தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் சுமார் 136 தென்னை மரங்கள் 68 பயனாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டன. இதே வேளை மண்முனைப் பற்று பிரதேச சபை உத்தியோகத்தர்களுக்கும் தென்னைமரங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
எம் எஸ் எம் நூர்தீன்








2 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025