Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 நவம்பர் 12 , பி.ப. 03:35 - 0 - 272
பேரின்பராஜா சபேஷ்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் செவ்வாய்கிழமை (12) நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் தடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற தேர்தல் மட்டக்களப்பு வேட்பாளருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேசிய ரீதியில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா அமைப்பு மாவட்ட உதவி தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் தேர்தல் பிணக்குகள் தீர்க்கும் பிரிவுக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் ஊடகவியலாளர் சந்திப்பு தடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தல்கள் சட்டங்களுக்கு முரணான வகையில் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
12 minute ago
38 minute ago