2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பிக்குணி உட்பட அறுவர் கைது

Editorial   / 2023 நவம்பர் 01 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோத மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு  எதிராக திவுலப்பிட்டிய நகர எல்லையில் இருந்து புதன்கிழமை (01) ஆரம்பிக்கப்பட்ட பேரணியை தடுத்து நிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்ததுடன், பிக்குணி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சசுன ரகுமாவின் குளோபல் மன்றத்தின் அழைப்பாளர் பலாங்கொட காஷ்யப தேரர் மற்றும் மின்சார பாவனையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

அந்த அமைப்புக்கள் மற்றும் தேசிய பிரஜைகள் ஆலோசகர் சங்கம் இணைந்து 'சட்டவிரோத மின்சார அதிகரிப்பு எதிரான நடைபயணம்' திவுலப்பிட்டி பஸ் நிலையத்திற்கு அருகில் காலை 8.40 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

அப்போது, ​​ஒலிபெருக்கி மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசிய நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் பாலித அமரதுங்க, பேரணியால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், பேரணியை நிறுத்துமாறும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் கலைந்து செல்லுமாறும் உத்தரவிடப்பட்டது.

அந்த உத்தரவை மீறி பேரணி ஆரம்பிக்கப்பட்டது. அதனையடுத்தே, இந்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .