2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பாதி சிகரெட்டை புகைத்து புகைவிட்ட பி.சி சுத்தம்

Editorial   / 2023 ஒக்டோபர் 31 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதி சிகரெட்டை புகைத்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தன்னிடமிருந்த பெறுமதியான பொருட்களை இழந்த சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பொதுக் கழிவறைக்கு வந்த பொலிஸ் கான்ஸ்டபிள், இனந்தெரியாத ஒருவர் கொடுத்த பாதி புகைத்த சிகரெட்டை புகைத்துவிட்டு போதையில் கவிழ்ந்துவிட்டார்.

அதன்பின்னர் அவரது  கழுத்திலிருந்த தங்க நகை மற்றும் கைத்தொலைபேசியை அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சொத்துக்களின் பெறுமதி 432,000 ரூபாய் என பொலிஸ் கான்ஸ்டபிளின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக   சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

மிஹிந்தலை பிரதேசத்தை வசிப்பிடமாகவும், அனுராதபுரம், மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சட்டத்தரணி ஒருவரை சந்திப்பதற்காக கொழும்பு வந்துள்ளார்.

பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பொதுக் கழிவறைக்குச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள், கழிவறைக்கு அருகில் நின்ற இனந்தெரியாத ஒருவர் கொடுத்த பாதி புகைத்த சிகரெட்டை புகைத்துள்ளார். அதன்பின்னர்  போதையாகிவிட்டார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .