Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 நவம்பர் 03 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
அறுகம்பே சுற்றுலா தளத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான பாசிக்குடா கடற்கரைக்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாசிக்குடா கடற்கரை இலங்கையின் புகழ்பெற்றதும் உலகின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலங்களின் ஒன்றாகவும் கருதப்படுகிறது
குறித்த பாசக்குடா கடற்கரையில் தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகை தருகின்றனர்
விடுமுறை தினங்கள் மற்றும் முழுமதி போயாதினங்கள் உட்பட பல்வேறு பண்டிகை காலங்களிலும் வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகளால் பாசிக்குடா கடற்கரை நிறைந்து காணப்படும்
குறித்த கடலில் மகிழ்ச்சியான முறையில் நீராடி மகிழ்வதற்கும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து ஓய்வு நேரத்தை கழிப்பதற்குமாக பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது
பாசிக்குடா கடற்கரை திடலில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் சுற்றுலா பொலிசார் உட்பட பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 24 மணித்தியாலமும் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் இடம் பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago