2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பழைய தொழில் செய்த ஐவர் சிக்கினர்

Editorial   / 2022 பெப்ரவரி 03 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி.கபில்

சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில்புரிவதாக தங்களுடைய வீட்டுகளில் தெரிவித்துவிட்டு, கட்டுநாயக்க பிரதேசத்தில் தங்கியிருந்து விபசாரம் செய்துவந்த பெண்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகிலே​யே மிகவும் பழைமையான தொழிலாக விபசாரம் கருதப்படுகின்றது. இந்நிலையிலேயே விபசாரம் செய்த குற்றச்சாட்டின் கீழ், மேற்படி பெண்கள் ஐவரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, ஏத்துகால பிரதேசத்தில் பெண்ணொருவர் மசாஜ் மத்திய நிலையம் எனும் பெயரில் விபசார தொழிலை முன்னெடுத்து வருகின்றார் என பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே, மாறு வேடங்களில் சென்றிருந்த பொலிஸார், ஐவரையும் கையும் மெய்யுமாக கைதுசெய்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள், 28 வயதுக்கும் 46 வயதுக்கும் இடைப்பட்டவர்கள், அவர்கள், புத்தளம், மஹியங்கனை, கண்டி, இரத்தினபுரி மற்றும் தங்கொட்டுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், குழந்தைகள் இருக்கும் குடும்பப் பெண்களாவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் ஐவரையும் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று (03) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .