2025 மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் பாதுகாப்புடன் O/L பரீட்சை தயார்

S.Renuka   / 2025 மார்ச் 16 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை (17) முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெற உள்ள 2024 (2025) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் வினாத்தாள்கள் பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு 3,663 மையங்களில் பரீட்சை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரீட்சைக்கு  478,182 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். அவர்களில் 398,182 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர் என்றும் பரீட்சைத் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

பரீட்சை நிலையங்களைச் சுற்றி சிறப்பு பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X