2025 மார்ச் 06, வியாழக்கிழமை

பொலிஸ் அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

S.Renuka   / 2025 மார்ச் 06 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து பிரிவுகளில் பணிபுரியும் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க இலங்கை பொலிஸ் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகளை 01.02.2025 முதல் 25 சதவீதம் அதிகரிக்குமாறு, பதில் ஐஜிபி, மூத்த டிஐஜிக்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் ஓஐசிகளுக்கு ஒரு சுற்றறிக்கை மூலம் தகவல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

களப் பணிகளில் ஈடுபடும் போக்குவரத்துப் பிரிவுகளின் OIC-கள், களப் பணிகளில் ஈடுபடும் இன்ஸ்பெக்டர்-தர அதிகாரிகள்,  பொலிஸ் சார்ஜென்ட்கள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் களப் பணிகளில் ஈடுபடும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஓட்டுநர்கள் ஆகியோருக்கு கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும்.

கொடுப்பனவுகளை தாமதமின்றி வழங்குமாறு பதில் ஐஜிபி அறிவுறுத்தியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .