2024 செப்டெம்பர் 28, சனிக்கிழமை

பலியானவர்களுக்கு 62 மில்லியன் ரூபாய் நட்டஈடு

Freelancer   / 2024 செப்டெம்பர் 27 , பி.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 246 மில்லியன் ரூபாய் நட்டஈடு பெறப்பட்டுள்ளதாகவும், அதில் 62 மில்லியன் ரூபாய்   உயிரிழந்தவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று (27) உயர்நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்த போதே இதை குறிப்பிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை சமர்ப்பித்தால், தற்போது மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நட்டஈடு வழக்குகளை திரும்பப் பெற முடியும் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி ஷமில் பெரேரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்ட சுமார் 300 நஷ்டஈடு வழக்குகள் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .