2024 டிசெம்பர் 19, வியாழக்கிழமை

பால்மா, யோகட்களின் வற் வரி நீக்கப்படும்

Freelancer   / 2024 டிசெம்பர் 18 , பி.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த அரசாங்கத்தினால் பால்மா மற்றும் யோகட் உள்ளிட்ட பொருட்களுக்கும் வற் வரி அறவிடப்பட்டிருந்தது.

எனினும் சிறுவர்களின் போசனை மட்டத்தை உயர்த்தும் நோக்கில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மா மற்றும் யோகட் என்பவற்றுக்கான வற் வரியை நீக்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மதிப்பாய்வின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (18) விசேட உரையொன்றை நிகழ்த்தி இதனைக் குறிப்பிட்டார். 

மேலும், கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் சேவை ஏற்றுமதி வரி 30 சதவீதமாகக் காணப்பட்டது. 

அதனை சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வகையில் 15 சதவீதமாகக் குறைப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதே சந்தர்ப்பத்தில் கட்டுப்படுத்தப்பட்ட வரியை 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிப்பதற்கு நாம் சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாம் மதிப்பாய்வின் போது இணக்கப்பாட்டை எட்டியுள்ளோம் என ஜனாதிபதி குறிப்பிட்டார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .