2025 ஜனவரி 30, வியாழக்கிழமை

பொருளாதார பரிமாற்ற சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்படும்

Freelancer   / 2025 ஜனவரி 28 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தை திருத்தங்களுடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (28) பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற "இலங்கை பொருளாதார உச்சி மாநாடு 2024" இல் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

சமூகங்களை ஒருங்கிணைத்து கிராமப்புற மக்களுக்கான புதிய பொருளாதார அலகுகளை உருவாக்குவது குறித்து இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிராமிய மக்களுக்கு புதிய பொருளாதார ஆதாரங்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு எனவும், அதற்காக சர்வதேச நிதியத்தின் அளவுகோல்களின் அடிப்படையிலும் கணிசமான தொகையை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார்.

மேலும், இந்த ஆண்டு 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என்று தான் எதிர்ப்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .