2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

பிரமதர் அலுவலகத்தில் சந்திப்பு

Mayu   / 2024 நவம்பர் 28 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் பல நாடுகளின் தூதுவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (28) இடம்பெற்றது.

ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், எகிப்து தூதுவர் அடில் இப்ராகிம், ஈரான் தூதர் டாக்டர் அலிரிஷா டெல்கோஷ், ஜப்பான் தூதர் இசமோட்டா அகிரோ, வத்திக்கான் தூதுவர் மேதகு பிஷப் பிரையன் உதய்க்வே ஆகியோர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் தூதரகங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகள், இலங்கை அரச அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X