2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பன்றி இறைச்சி வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கி சூடு

Editorial   / 2023 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பன்றி இறைச்சி விநியோகத்தில் ஈடுபட்டிருந்த பணக்கார வர்த்தகரின் வீட்டின் மீது இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் நேற்று(03) இரவு 7.00 மணியளவில் வந்த இருவரே துப்பாக்கிப்பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது வர்த்தகர் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனிருந்ததாகவும், ஆனால் அவர்களில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை எனவும் அப்பகுதியின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர்   தெரிவித்தார்.

இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த வீட்டின் வாயில் மற்றும் சுவர்களில் துப்பாக்கி குண்டுகள் பதிந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் இந்த வர்த்தகரிடம் கப்பமாக பல இலட்சம் ரூபாவை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  கோரப்பட்ட கப்பம் செலுத்தாததால் அவரது கையாட்கள்  இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தனக்கு தகவல் கிடைத்ததாக மூத்த பொலிஸ் அதிகாரி கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .