2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

பத்திரமாக இருக்கிறது; பயமாகவும் இருக்கிறது

Freelancer   / 2022 செப்டெம்பர் 04 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் இருந்து திருடப்பட்ட புத்தர் சிலை மற்றும் புத்தகங்கள் தன்னிடம் இருப்பதாக ஜனாதிபதி செயலகத்தின் பொது இலக்கத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட புத்தர் சிலை மற்றும் புத்தகங்களை தன்னிடம் வைத்திருக்க பயமாக இருக்கிறது என்றும் அதனை உரிமையாளரிடம் மீள ஒப்படைக்க வேண்டும் எனவும் அழைப்பெடுத்த நபர் தெரிவித்துள்ளார்.

புத்தர் சிலை மற்றும் புத்தகங்கள் பத்திரமாக இருப்பதாக தொலைபேசியில் தெரிவித்த நபர், ஜனாதிபதியின் செயலாளரிடம் பேச விரும்புவதாக கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அழைப்பின் மூலம் தகவலைப் பெற்றுக்கொண்ட அதிகாரி, ஜனாதிபதியின் செயலாளரிடம் விடயத்தை தெரிவித்ததையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளை செயலாளர் ஒப்படைத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X