2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

புதிய அவசர இலக்கம் அறிமுகம்

Freelancer   / 2024 ஒக்டோபர் 11 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆகியவற்றை தவறாக பயன்படுத்தப்பட்டால் அல்லது திருடப்பட்டால், அது தொடர்பில் புகார் அளிக்க புதிய அவசர இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

துல்லியமான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு பண ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், அவர் கூறியுள்ளார். 

இந்த முன்முயற்சி, பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதையும் அரச சொத்துக்களை சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (AN)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .