2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

போதைப்பொருள் குற்றவாளிக்கு மரண தண்டனை

Simrith   / 2025 ஏப்ரல் 03 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

16 கிராம் மற்றும் 882 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் ஒரு குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சபுவித  மரண தண்டனை விதித்து, வியாழக்கிழமை (03) தீர்ப்பாளித்தார்.

இரு குற்றச்சாட்டுகளையும் அரசு தரப்பு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபித்ததாக முடிவு செய்த பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றவாளியான வெலிவிட்ட சாயக்காரகே அசங்க சஞ்சீவ, ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த போது  கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் 2019 பெப்ரவரி 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X