Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 22 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டிகை காலங்களின் போது பஸ் உள்ளிட்ட வாகனங்களை சோதனையிடும் வகையில் விசேட போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பயணிகள் போக்குவரத்து பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களை கருத்திற் கொண்டு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கு அமைய இந்த போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இங்கு, பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் முக்கியமாக பரிசோதிக்கப்பட்டு, மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுபவர்கள், போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள், தகாத நிலையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் குறித்து சிறப்பு சோதனை நடத்தப்படுகிறது ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்த விசேட நடவடிக்கை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் எனவும், 24 மணித்தியாலங்களும் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் மணதுங்க தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 119 மற்றும் 1997 ஆகிய குறுகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்க முடியும் எனவும், போக்குவரத்து விதிகளை மீறுவது தொடர்பான காணொளிகள் இருப்பின் 119 மற்றும் 1997 ஆகிய இலக்கங்களுக்கு தகவல் வழங்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். வாட்ஸ்அப் மூலமாகவும் அனுப்பலாம்.
கொழும்பு மாநகர போக்குவரத்து பிரிவு 0718591741, போக்குவரத்து தலைமையக பணிப்பாளர் 0718591967, மேல்மாகாண வடக்கு போக்குவரத்து பிரிவு பணிப்பாளர் 0718592857, மேல்மாகாண பணிப்பாளர் தெற்கு போக்குவரத்து பிரிவு 0718592278 என்ற இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்கமுடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago
9 hours ago