2025 மார்ச் 19, புதன்கிழமை

“பெண்களை நியமிப்பது சாத்தியமில்லை”

S.Renuka   / 2025 மார்ச் 19 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களை ரயில் ஓட்டுநர்களாக நியமிப்பது சாத்தியமில்லை என்று ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

111ஆம் வகுப்புக்கு ரயில் ஓட்டுநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டித் பரீட்சைக்கான விண்ணப்பங்களை வர்த்தமானி அறிவிப்பின் மூலம் திணைக்களம் கோரியுள்ளது.

இந்த மாதம் 28ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவிப்பின்படி, ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே  விண்ணப்பிக்க முடியும்.

சுமார் 8 வருட இடைவெளிக்குப் பிறகு, இந்த ஆண்டு சுமார் 100 ஓட்டுநர்களை பணியமர்த்துவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ரயில்வே திணைக்களம் பல ஆண்டுகளாக ரயில் ஓட்டுநர்களை நியமிக்காததால் சுமார் 150 ஓட்டுநர்களை பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்காலத்தில் பெண்களை ரயில் ஓட்டுநர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X