2025 மார்ச் 06, வியாழக்கிழமை

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க நடவடிக்கை

S.Renuka   / 2025 மார்ச் 06 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுப் போக்குவரத்தின்போது இடம்பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சம்பந்தமான முறைப்பாடுகளை அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.டி. விதாரன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற விசேட ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பொதுப் போக்குவரத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகளைத் தவிர்ப்பதற்காக நீண்ட கால வேலைத் திட்டம் ஒன்று அவசியம் என்றும், பொதுப் போக்குவரத்தை பெண்களுக்கான பொது இடமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தற்போது பரவலாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அது தண்டனைச் சட்டக் கோவை 345 ஆம் பிரிவின் கீழ் குற்றவியல் குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதற்கான சட்டத்தை கடுமைப்படுத்தி உள்ளதாகவும் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக சமூக விவாதம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளால் தற்போது பெண்கள் தனிமைப்படுத்தப்படுவதாகவும், அவர்கள் தனியாகப் போராட வேண்டிய இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர், அதற்காக முழு பயணிகள் சமூகமும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கான வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

தனியார் பஸ்களுக்கான வீதி அனுமதிப்பத்திரம் அந்த பஸ்களில் சிசிரிவி பாதுகாப்பு கெமரா கட்டமைப்பு பொருத்தப்பட்டு இருப்பின் மாத்திரம்தான் வழங்கப்படும் என்றும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .