Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 16, வியாழக்கிழமை
Editorial / 2025 ஜனவரி 16 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்டைய குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'பொடி லெசி' என்றழைக்கப்படும் ஜனித் மதுசங்க இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
பிணை நிபந்தனையை மீறி, இந்தியாவுக்கு தப்பிச் சென்ற இவரை, கைது செய்வதற்கான நடவடிக்கைகளை இந்திய பொலிஸாருடன் இணைந்து இலங்கை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். அவ்வாறு கைது செய்யப்பட்ட பொடி லெசியை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது,
தடுப்புக் காவலில் இருந்த 'பொடி லெசி' 2024 டிசம்பர் 9, அன்று பலபிட்டிய மேல் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அத்துடன், சந்தேக நபருக்கு அடுத்த வழக்கு திகதி வரை பயணத் தடையையும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், 'பொடி லெசி' தனது பிணை நிபந்தனைகளை மீறி நாட்டை விட்டு தப்பிச் சென்றார். அவர் இந்தியாவில் இருப்பதாக தகவல் கிடைத்ததும், சந்தேக நபரைக் கைது செய்ய இந்திய அதிகாரிகளிடம் உதவி கோரினார். அதனடிப்படையிலேயே 'பொடி லெசி' கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago