2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பட்டாசு ஆலை விபத்து: இருவர் பலி

Freelancer   / 2024 செப்டெம்பர் 01 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தூத்துக்குடியில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 2 பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே குறிப்பான்குளத்தை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் 6 தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் இருந்தனர்.

இவர்கள் இருந்த அறைக்கு அருகே உள்ள அறையில் திடீரென பட்டாசுகள் வெடித்தன. இதில் இருந்த வந்த தீப்பொறிகள் விழுந்து, தொழிலாளர்கள் பணியாற்றிய அறையில் இருந்த பட்டாசுகளும் வெடிக்க தொடங்கின. 

தகவல் அறிந்து, பொலிஸாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .