Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 15, சனிக்கிழமை
Freelancer / 2025 மார்ச் 14 , பி.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
படலந்தை ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
சம்பந்தப்பட்ட அறிக்கை தொடர்பாக இரண்டு நாட்கள் விவாதிக்கப்படவுள்ளதாக சபை முதல்வர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவையினால் இந்த பட்டலந்தை அறிக்கை தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்குக் கொள்கைத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
தலைமுறையின் மனசாட்சியை கட்டுப்படுத்தும் இந்த அறிக்கையை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கும் மக்கள் மயப்படுத்துவதற்கும் எனக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போராட்டங்களை நடத்திய தலைமுறையின் கண்ணீர் அவர்கள் அனுபவித்த வேதனைகள் மற்றும் சோதனைகள் அவற்றுக்கு அர்த்தம் தெரிவிப்பதற்கு 208 பக்கங்களுடன் காணப்படும் இந்த அறிக்கைக்கு முடியாது என்பதை நாம் அறிவோம்.
இந்த அறிக்கை கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் மற்றும் அவர்களின் பாசமிக்கவர்களுடைய வேதனைகள் மற்றும் பெருமூச்சுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அறிக்கையாக அதனைத் தயாரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்.
ஜனாதிபதி செயலகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த அறிக்கை 35 வருடங்களுக்குப் பிறகு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதாகச் சபை முதல்வர் குறிப்பிட்டார்.
தமது அரசியல் நோக்கங்களுக்காக நாடொன்று பல யுகங்களாக முற்றிலும் அழித்துச் செல்லப்பட்டுள்ளது.
எவ்வாறு எனில், ஜனநாயகத்திற்குக் கிடைத்த மக்கள் வரத்தை தமது நண்பர்களுக்காகப் பலிகடாவாக்க முடியுமா என்பது தொடர்பாக இந்த அறிக்கை ஒரு வாழும் சாட்சியாகும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார் . R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 minute ago
14 minute ago
3 hours ago