Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 22, புதன்கிழமை
Editorial / 2025 ஜனவரி 22 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
“வளமான நாடு - அழகான வாழ்க்கையை” உருவாக்கும் பயணம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று(22) நடந்த விவாதத்தில் நாட்டின் பல்வேறு துறைகளில் மக்கள் எதிர்நோக்கி வரும் பல பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் நான் பாராளுமன்றத்தினதும் அரசாங்கத்தினதும் கவனத்துக்கும் கொண்டு வர நடவடிக்கை எடுத்தேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். .
இங்கு பல முக்கிய துறைகளில் நிலவும் பிரச்சினைகளை இவ்வாறு இரு தரப்பினதும் கவனத்துக்கு கொண்டு வந்தேன். அவை;
1. அரசாங்கம் உறுதியளித்தபடி மின்சாரக் கட்டணத்தை 1/3 குறைத்தல்.
2. நாட்டில் பெருகி வரும் குற்றச் செயல்களை கட்டுப்பாட்டுத்தி மக்களின் உயிர்களைப் பாதுகாத்தல்.
3. இன்னும் தீர்க்கப்படாத கடவுச்சீட்டுப் பிரச்சினை.
4. தேங்காய் எண்ணெய் இறக்குமதிப் பிரச்சினை.
5. துறைமுகத்தில் நிலவிவரும் கொள்கலன் நெரிசல் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை.
6. சஃபாரி ஜீப் நடத்துநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்.
7. வேலையில்லாப் பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்.
8. சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பிற்கு வழங்கப்படும் 15% வட்டியை மீள வழங்கல்.
9. கல்வியற் கல்லூரி மற்றும் தாதி பயிலுநர் பயிற்சியில் உள்ள சிக்கல்கள்.
10. கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள்.
என மேற்கூறிய இப்பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கின்றேன் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
55 minute ago
2 hours ago
2 hours ago