2025 மார்ச் 19, புதன்கிழமை

பட்டதாரிகளை சந்தித்தார் சஜித்

J.A. George   / 2025 மார்ச் 18 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்திற்கு அருகில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்று சந்தித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள பொல்துவ சந்தியில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தலின் போது, ​​அரசாங்கம் வேலைகளை வழங்குவதாக உறுதியளித்திருந்த போதிலும், அந்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் பேசிய வேலையற்ற பட்டதாரிகள் கூறினர்.

தாம் உள்ளிட்ட சுமார் 40,000 பட்டதாரிகள் வேலையற்று உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றதில் தான் பேசிய போதிலும், அரசாங்கத்திடமிருந்தோ அல்லது பொறுப்பான தரப்பினரிடமிருந்தோ எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று அவர்களுக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X