Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 04, செவ்வாய்க்கிழமை
S.Renuka / 2025 மார்ச் 04 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிரியர் தகுதிப் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்காத வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் பொல்துவ சந்தியில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ள போராட்டத்திற்கு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (4) அன்று தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
குறித்த சங்கங்களின் அழைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டார்கள் திட்டமிடப்பட்டிருந்த வெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாராளுமன்றம் செல்லும் பாதையில் பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் நீதிமன்ற தடையுத்தரவு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
வீதிகளை மறித்து பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதால் அதனை தடுக்கும் உத்தரவொன்றை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றிடம் விடுக்கப்பட்டமைக்கு அமைவாக நீதிமன்றம் இதற்கான உத்தரவை வழங்கியுள்ளது.
அதற்கமைய, ஜயவர்தனபுர பல்கலைக்கழக பட்டதாரியாக செயற்படும் சுதேஷ் ரூபசிங்க, ஒன்றணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தம்மிக்க முனசிங்க, ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமந்தா கமகே, ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தினுஷா ஏகநாயக்க, ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பூர்ணிமா நதீஷா உள்ளிட்ட ஏனையவர்களுக்கு எதிராக இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நபர்கள் மற்றும் அவர்களைப் பின் தொடரும் நபர்கள், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வீதியை மறித்து பேரணியாக செல்ல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் நடைபாதையில் பயணிக்கும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு வீதியையும் மறித்து, ஆர்ப்பாட்டம் அல்லது வன்முறைகளில் ஈடுபடாதிருக்கவும், எம்.பிக்களின் பாராளுமன்ற வரப்பிரசாதங்கள் பாதிக்கப்படும் வகையிலோ, கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் மேற்படி பிரதிவாதிகள் மற்றும் அவர்களைப் பின்தொடரும் நபர்கள் பார்த்துக் கொள்ள வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு பொறுப்பேற்க முடியாத நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்தை உடனடியாக கலைக்க வேண்டுமெனவும், உத்தரவை மீறி செயற்பட்டால், அமைதியைப் பேண இலங்கை பொலிஸார் அதற்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறித்த நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago