Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய மீன்பிடிப் படகுகளை இலங்கையில் ஏலம்விடும் செயற்பாடுகள் தொடர்பாக பத்திரிகை ஒன்றால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இன்று (09) வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தாவது,
இலங்கையில் இந்திய மீன்பிடி படகுகள் ஏலம் விடப்படுகின்றமை தொடர்பாக வெளியான பல்வேறு அறிக்கைகளும் செய்திகளும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கவனத்துக்கு வந்துள்ளன.
இவ்விடயம் தொடர்பாக இந்திய அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் இருதரப்பு புரிந்துணர்வு ஒன்று ஏற்கனவே உள்ளது என்பதை முதலில் வலியுறுத்தி கூறுகின்றோம்.
இந்த புரிந்துணர்வுக்கு அமைவாக இலங்கையில், இயக்க முடியாத நிலையிலுள்ள இந்திய மீன்பிடி படகுகளை அகற்றுவது குறித்த தீர்மானங்களை மேற்கொள்வதற்காக இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவிருந்தனர்.
இலங்கை அரசாங்கத்திடம் இந்த விஜயத்திற்கு தேவையான அனுமதியை உயர் ஸ்தானிகராலயம் மீண்டும் கோரியுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago
29 Apr 2025