Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 25 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்கம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. நான்கு பயங்கரவாதிகள் ராணுவ உடையில் வந்ததாகவும் மதத்தைக் கேட்டு கேட்டு ஒவ்வொருவரையும் சுட்டுக் கொன்றதாக தாக்குதலை நேரில் கண்ட ஒரு பெண் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பலியானதாக கூறப்படும் நிலையில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயத்தின் லஸ்கர்- இ-தொய்பா அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிடென்ஸ் ஃப்ரண்ட் பொறுப்பேற்று இருக்கிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதை அடுத்து பாகிஸ்தான் உடனான பல்வேறு ஒப்பந்தங்களை இந்தியா ரத்து செய்துள்ளது.
குறிப்பாக சிந்து நதிநீரை அடைத்துள்ளது, பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, வாகா எல்லை மூடப்படுவது என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தொடர்ந்து இந்தியாவின் முப்படைகளும், எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட துணை ராணுவத்தினரும் தயார் நிலையில் இருக்கின்றனர்.
இன்று காலை எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பஹல்காம் தாக்குதலில் புலனாய்வு தொடர்பாக ஜம்மு காஷ்மீர் போலீசுக்கு உதவும் வகையில் தேசிய புலனாய்வு முகமை அந்த விசாரணையை முழுமையாக எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதல் சம்பவ தொடர்பாக, உயரதிகாரிகள் ஆலோசனை நடத்திய நிலையில் சர்ஜிகல் ஸ்ட்ரைக் போன்ற சிறப்பு நடவடிக்கையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago