2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

நிவாரண பணிகளை மேற்பார்வையிட குழுக்கள் நியமனம்

Freelancer   / 2024 நவம்பர் 29 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அமைச்சரவை அமைச்சர்கள் தலைமையில் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக, அந்தந்த மாகாணங்களில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளை, நேற்று (28) இக்குழுவினர் கண்காணித்தனர்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, கிழக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கு தலைமை தாங்கும் கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலகே தெரிவித்தார்.AN


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .