2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

நீர்கொழும்பில் ஒருவர் சுட்டு கொலை

Editorial   / 2024 பெப்ரவரி 11 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம். இஸட். ஷாஜஹான்
 
நீர்கொழும்பு கல்கந்த சந்தியில் மோட்டார் சைக்கிளில்  சனிக்கிழமை (10) இரவு 7.30 மணியளவில் வந்த இனந்தெரியாத  இரு ஆயுததாரிகள், மேற்படி நபரை  துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே குறித்த நபர் சுடப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு, பால்தி சந்தி பகுதியில் உள்ள விடுதியொன்றில் பணிபுரிந்து வந்த இந்த நபர்,  கல்கந்த சந்தியிலிருந்து மினுவாங்கொட வீதிக்கு திரும்பும் போதே துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் பலியான ரெக்ஸ் சல்காது என்ற 62 வயதுடைய இந்த நபர் நீர்கொழும்பு,  குரணை  பிரதேசத்தில் குடும்பத்துடன்    வசித்து வந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X