2025 ஏப்ரல் 09, புதன்கிழமை

நித்தியானந்தா உயிருடன் உள்ளார்

Freelancer   / 2025 ஏப்ரல் 03 , மு.ப. 07:00 - 0     - 70

நித்தியானந்தா உயிரிழந்துவிட்டார் என வெளியான தகவலை கைலாசா மறுத்துள்ளது. இந்த விடயத்தைக் கண்டித்து கைலாசா அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
 
நித்தியானந்தாவின் சகோதரி மகன், நித்தியானந்தா ஜீவசமாதி அடைந்துவிட்டார் என காணொலி ஒன்றில் தெரிவித்திருந்தார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
 
இவ்வாறு வெளியான தகவல்களை மறுக்கும் வகையில் கைலாசா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
அந்த அறிக்கையில்,  நித்தியானந்தா ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், உயிருடனும், உத்வேகத்துடனும் இருக்கிறார் என கைலாசா உறுதியாக அறிவிக்கிறது. நித்தியானந்தாவை இழிவுபடுத்தவும் ,அவதூறு செய்யவும் தொடுக்கப்பட்ட இந்த தீய அவதூறு பிரசாரத்தை கைலாசா திட்டவட்டமாக மறுக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதேவேளை, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பும் அவர் இறந்துவிட்டார் எனவும் வதந்திகள் பரவியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X