Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2023 நவம்பர் 27 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், உடஹமுல்ல இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் நடத்துனர் ஒருவரின் விரலை கத்தியால் வெட்டி 7,300 ரூபாவை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இங்கிரிய, உறுகல பகுதியைச் சேர்ந்த, காயமடைந்த நடத்துனர், சிகிச்சைக்காக ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இங்கிரிய- ஹெட்டியாவத்தை 176 வழிதடத்தில் இங்கிரிய நகரிலிருந்து காலை தனது பயணத்தை ஆரம்பிக்கும் பஸ்ஸில் சேவையாற்றும் நடத்துனர். தனது வீட்டிலிருந்து முச்சக்கரவண்டியில், நகரத்துக்கு வந்துள்ளார்.
முச்சக்கரவண்டியை வர்த்தக நிலையமொன்றுக்கு அருகில் நிறுத்திவைத்துவிட்டு, பயணச்சீட்டு இயந்திரத்தை எடுடுதுக்கொண்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸூக்காக வந்துக்கொண்டிருந்தபோதே, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவரது கையொன்றில் விரலை துண்டித்துவிட்டு, பணத்தை அபகரித்துச் சென்றுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
48 minute ago
53 minute ago