2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

நடத்துனரின் வித்தியாசமான நடத்தை

Janu   / 2025 ஜனவரி 29 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சியிலிருந்து முகமாலை நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் ஏற்பட்ட அதிக சன நெரிசலுடன்    பயணிகளிடமிருந்து பணம் பெறுவதற்காக நடத்துனர்  பின்பற்றிய முறையை பலரும் விமர்சித்து வருகின்றனர்.  

குறித்த தனியார் பேருந்து செவ்வாய்க்கிழமை (28) அன்று கிளிநொச்சியில் இருந்து முகமாலை நோக்கி பயணித்த நிலையில், இதில் அதிகளவான பயணிகள்   இருந்ததால்,  நடத்துனர் பணம் பெறுவதற்காக பேருந்தின் இருக்கைகளுக்கு மேல் ஏறி பயணித்துள்ளார்.

நடத்துனரின் இந்த நடத்தையால் , இருக்கைகளில் அமர்ந்திருந்த பயணிகள் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

மேலும், தனியார் பேருந்துகளில் அதிகளவான பயணிகளை ஏற்றிச் செல்வதால்   விபத்து ஏற்படும் அபாயம்  அதிகரித்துள்ளதாக பயணிகள்  குற்றம் சாட்டுகின்றதுடன்  அதிகாரிகள் உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X