Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 பெப்ரவரி 01 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கடந்த வாரம் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இணையவழி பாதுகாப்புச் சட்டமூலத்தின் சான்றிதழை மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றுரைப்படுத்தியுள்ளார்.
அதற்கமைய, ஜனவரி மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றைய தினம் (01) சான்றுரைப்படுத்தினார்.
இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2024 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.
அத்துடன், பாராளுமன்றத்தில் விவாதித்து திருத்தங்களுடன் கடந்த ஜனவரி மாதம் 09ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தேசிய நீரளவை சட்டமூலம் மற்றும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலம் ஆகியவற்றிலும் சபாநாயகர் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
இதேவேளை, இந்தச் சட்டமூலங்கள் 2024ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க தேசிய நீரளவை சட்டம் மற்றும் 2024ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமாக நடைமுறைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .