2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

தேர்தலை புறக்கணித்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Freelancer   / 2024 ஒக்டோபர் 12 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத் தேர்தலில், மேலும் 17 முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, தேர்தலில் களமிறங்க போவதில்லை என முடிவு செய்தவர்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது.

இவ்வருட பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என தாம் நீண்ட நாட்களுக்கு முன்னரே தீர்மானித்ததாகவும், திருடர்களை வைத்து அரசியல் செய்வதற்கு நான் தகுதியற்றவன் எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியலில் தாம் மிகவும் ஏமாற்றமடைந்து உள்ளதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் தேர்தல் நோக்கத்திற்காக நாடு முழுவதும் களவிஜயம் மேற்கொள்ளவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.(AN)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X