Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2025 ஏப்ரல் 22 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடியம்பலம, தெவமொட்டாவ பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரை சுட்டுக் கொல்ல முயற்சித்த இரு துப்பாக்கிதாரிகளில் ஒருவர் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் செவ்வாய்க்கிழமை (22) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடியம்பலம், கம்மோட்டாவா பகுதியை சேர்ந்த 37 வயதுடைய அஞ்சன என்ற குறித்த தொழிலதிபர் கடன் வழங்கும் தொழிலையும் நடத்தி வருபவர் என தெரியவந்துள்ளது.
சம்பவ தினத்தன்று காலை 10.05 மணியளவில் சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்கள் வாகனத்தின் புத்தகத்தை வைத்து பணம் பெற்றுக்கொள்ள வந்ததாக தெரிவித்துள்ளனர் .
வந்தவர்களின் நடத்தையில் சந்தேகம் அடைந்த தொழிலதிபர், உடனடியாக ரிமோட் கண்ட்ரோலைப் பயன்படுத்தி வீட்டின் நுழைவாயிலை மூடியுள்ளார் . இதன்போது பதற்றமடைந்த சந்தேக நபர்கள் தொழிலதிபரை சுட்டுக்கொள்ள முயற்சித்துள்ளனர் . ஆனால் துப்பாக்கிகள் சரியாக செயல்படாததால், தங்கள் முயற்சியை கைவிட்ட துப்பாக்கிதாரிகள் உடனடியாகத் திரும்பி, ஓடி, தொழிலதிபரின் வீட்டின் 9 அடி உயர சுவரில் இருந்து குதித்துள்ளனர் .
சந்தேக நபர்களின் ஒருவரின் கால் முறிந்துள்ளதோடு மேலும் அவர் தனது துப்பாக்கியால் தன் உயிரை மாய்த்துக்கொள்ளவும் முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது .
இந்த சம்பவம் குறித்து கட்டுநாயக்க பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் , தொழிலதிபரின் வீட்டின் சுவருக்கு அருகில் விழுந்து கிடந்த அம்பாறை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளனர் . அவரிடமிருந்து ரிவால்வர் ரக துப்பாக்கியொன்று , 05 துப்பாக்கி ரவைகள் , 09 மிமீ ரக கைத்துப்பாக்கிக்கான 09 தோட்டாக்களுடன் கூடிய ஒரு மகசின் மற்றும் மற்றொரு 09 மிமீ கைத்துப்பாக்கிக்கான வெற்று மகசின் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர் .
கைது செய்யப்பட்ட நபர் தற்போது மருத்துவ சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு துப்பாக்கிதாரி 9மிமீ பிஸ்டலுடன் பகுதியிலிருந்து காணாமல் போயுள்ளார். இருப்பினும், அவர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் விட பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
டீ.கே.ஜீ. கபில
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .