2024 செப்டெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

கடமையிலிருந்த அதிகாரியின் பொறுப்பற்ற செயல்

Freelancer   / 2024 செப்டெம்பர் 22 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த போது T56 துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்களை  விட்டுச் சென்ற கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

நிட்டம்புவ பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கான்ஸ்டபிள், கம்பஹா உடகஹா வல்பொல கூட்டுக்கல்லூரியின் வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றும் போது, ​​பொறுப்பான அதிகாரிக்கு அறிவிக்காமல் அனுமதியின்றி T56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பொலிஸ் நிலையத்தில் வைத்துவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக நேற்று (21) முதல் அவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவிக்கின்றது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .