2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

தயாசிறி கடும் குற்றச்சாட்டு

Freelancer   / 2024 மே 08 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் நிலையில், கலைந்துள்ள உள்ளூராட்சி சபைகளை மீள செயற்படும் வகையில் அரசாங்கம் திட்டங்களை முன்னெடுப்பதாக சுயாதீன எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07)  விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கத்தினால் நிதி வழங்க முடியாது என்பதனால் உள்ளூராட்சித் தேர்தல் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறான நிலைமையில் பண்முகப்படுத்தப்பட்ட வரவு- செலவு வேலைத்திட்டத்திற்கமைய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஜுலை 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறு சுற்றுநிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டே இது செய்யப்படுகின்றது. எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கு பண்முகப்படுத்தப்பட்ட நிதி வழங்கப்படாது.

இதேவேளை உள்ளூராட்சி அதிகார எல்லைப் பிரதேசங்களுக்கு ஆலோசனை குழுக்களை அமைக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பழைய உள்ளூராட்சி, நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலைமையில் மீண்டும் செயற்படச் செய்து அரசாங்கத்தின் உள்ளூராட்சித் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் ஊடாக வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதை இதன்மூலம் திட்டமிடப்படுகின்றது என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .