2025 ஜனவரி 04, சனிக்கிழமை

தாயின் தகாத உறவால் சிறுமி பலி

Janu   / 2024 டிசெம்பர் 29 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தன்னுடன் தகாத உறவில் ஈடுபட்டுவந்த பெண், வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிபோகவே, அந்த நபர், தான் மறைத்துவைத்திருந்த கத்தியால், பெண் மற்றும் அவருடைய இரண்டு பிள்ளைகளையும் வெட்டியுள்ளார். இதில், 13 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், பிலியந்தலையில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தையடுத்து சந்தேக நபர் ,  தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளதாகவும் பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைவதாக வீட்டாரிடம் கூறி,  வீட்டை விட்டு வெளியேறி தப்பிச் சென்றுள்ளதாகவும்  பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுமியின் தாயாரின் இடது முழங்கை, இடது தோள்பட்டை தலை மற்றும் இடது காதில் காயங்கள் ஏற்பட்டுள்ளன., மூத்த சகோதரியின் இடது கை வெட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X