2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம்

Mayu   / 2024 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை (22)  அறிமுகம் செய்தார்.

கட்சி கொடியில் சிவப்பு, மஞ்சள் நிற கொடியில் இரண்டு போர் யானைகளுக்கு நடுவே வாகை மலர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் அடங்கிய பாடலும் வௌியிடப்பட்டுள்ளது. 

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவக்கியுள்ள விஜய், 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்க உள்ளார். அதற்கு முன், கட்சியின் பெயர் மற்றும் கொடியை, மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை துவக்கி உள்ளார்.

அதன் ஒரு பகுதியாக, இன்று பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்டது. பனையூரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில், சற்று முன் கொடியேற்றி வைத்த விஜய், கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் அடங்கிய பாடலை வெளியிட்டார்.

இதற்கமைய, நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்,  தமிழ் மாநில காங்கிரஸ்  தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்தனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .