2025 ஜனவரி 03, வெள்ளிக்கிழமை

தமிழ் பாடசாலைகளுக்கான விடுமுறை குறித்த முக்கிய செய்தி

Freelancer   / 2024 ஒக்டோபர் 31 , மு.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் முதலாம் திகதி விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அம்மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார். 

நாளைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளமையினால், மறுநாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலப் பாடசாலைகளும் விசேட பாடசாலை விடுமுறையாக மூடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X