2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

தபால் வாக்குப்பதிவு திகதிகளில் மாற்றம்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 17 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவுக்கான திருத்தப்பட்ட திகதிகளை தேர்தல் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை (17) அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் 22, 23, 24, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் தபால் வாக்குப்பதிவு நடைபெறும் என்று முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது அத் திகதி திருத்தப்பட்டு

ஏப்ரல் மாதம் 24, 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் தபால் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் அட்டைகள் ஏப்ரல் 16 ஆம் திகதி அஞ்சல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தபால் அட்டைகள் விநியோகம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி வரை வாக்குச் சீட்டு விநியோகம் நடைபெறும் என்றும், ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிக்குள் வாக்குச் சீட்டுகளைப் பெறாவிட்டால் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்தை அணுகுமாறும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X