2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

’தப்புக்கணக்குப் போடாதீர்கள்’

Freelancer   / 2025 ஏப்ரல் 19 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெறுமனே 24 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் மக்கள் நிராகரித்ததாக அநுர அரசு  கணக்குப் பார்க்கின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்.

பாரம்பரிய தமிழ்க் கட்சிகளைத் தமிழ் மக்கள் புறக்கணித்து தேசிய மக்கள் சக்திக்கு ஆணையை வழங்கியுள்ளனர் என்று கூறும் ஜனாதிபதி அநுரகுமார அந்த மக்கள் ஆணையை வைத்து தையிட்டி விகாரைப் பிரச்சினையைத்  தீர்த்திருக்கலாமே? யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெறுமனே 24 சதவீத வாக்குகளை மட்டுமே தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டது. 

76 சதவீதமான வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக வழங்கப்பட்டிருக்கின்றன. 24 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் மக்கள் நிராகரித்ததாக அரசு கணக்குப்  பார்க்கின்றது எனில் நாட்டின் பொருளாதாரக் கணக்கு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை மக்கள் யோசிக்க வேண்டும் என்றார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .