2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

தந்தையை கட்டியணைத்த சிறுமி மரணம்

Janu   / 2024 ஜூன் 26 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

முச்சக்கரவண்டியொன்று மின் கம்பத்தில் மோதியதில் பின் இருக்கையில் இருந்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவமொன்று திவுலப்பிட்டிய, கடவல பிரதேசத்தில், இடம்பெற்றுள்ளது என  திவுலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர் .

முச்சக்கரவண்டியின் சாரதியான, சிறுமியின் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது

உயிரிழந்த சிறுமி தனது பாட்டி, தாய் மற்றும் தந்தையுடன் நீர்கொழும்புக்கு சென்று, வேலைக்குச் செல்வதற்காக தாயை  நீர்கொழும்பில் இறக்கிவிட்டு , தனது பாட்டியுடன் முச்சக்கரவண்டியின் பின்புறம் அமர்ந்து வீட்டிற்கு வந்துள்ளார் .

இந்நிலையில் திவுலப்பிட்டி,  பின்னாலிருந்த சிறுமி, தந்தையின் கழுத்தை கடவல பகுதியில் வைத்து கட்டிப்பிடித்துள்ளார்.அப்போது தந்தையால் முச்சக்கரவண்டியை கட்டுப்படுத்த முடியாமல் சென்று முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியுள்ளது. அதன்போது சிறுமி வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுமி உயிரிழந்துள்ளதுடன் தந்தை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திவுலபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .