2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

திடீர் மரண பரிசோதகர் திடீரென கைது

Janu   / 2025 ஏப்ரல் 09 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

திடீர் மரண விசாரணை அதிகாரியும் அவரது உதவியாளரும் லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

 2,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிலிலேயே அவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

அனுராதபுரம் மார்க்கெட் பிளேஸில் உள்ள அவர்களது அலுவலகத்தில், மரண விசாரணை அதிகாரியும் அவரது உதவியாளரும்  கைது செய்யப்பட்டனர். இறந்த நபரின் இறப்பு சான்றிதழைப் பெறுவதற்கு தொடர்புடைய விண்ணப்பப் படிவத்தை நிரப்பி சான்றளிக்க ஒருவரிடமிருந்து அவ்விருவரும் 2 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாக பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .