Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 22 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் கொலைச் சம்பவங்கள் நடந்து வரும், கொலை கலாச்சாரம் இருந்து வரும் நிலையில் நாட்டு மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதனால், சமூகத்தில் அனைவரும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். சட்டம் ஒழுங்கு அமைச்சர் இது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
“பிள்ளைகள் மற்றும் ஒட்டு மொத்த சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் முறையான வேலைத்திட்டத்தை முன்வையுங்கள். நீதிபதிகளினதும் சட்டத்தரணிகளினதும் பாதுகாப்பு கூட பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .